இந்தியா ஜெனராசிட்டி ஓட்டம்- 2022 மாற்றுத்திறனுடையோர் சமூகவிழிப்புணர்வு பேரணி கடலூரில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 18 October 2022

இந்தியா ஜெனராசிட்டி ஓட்டம்- 2022 மாற்றுத்திறனுடையோர் சமூகவிழிப்புணர்வு பேரணி கடலூரில் நடைபெற்றது.

இந்தியா ஜெனாரசிட்டி ஓட்டம் என்ற இயக்கம் தொண்டு நிறுவனங்களின் பல்வேறு சமூகநல செயல்பாடுகளை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஆண்டும்       செயல்படுத்தி வருகிறது. இவ்வாண்டு, நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் இந்திய விடுதலைக்கான சத்தியாகிரக  நடைபயனத்தை நினைவு கூறும் விதமாக இந்தியா முழுவதும் பல்வேறு சமூகநல தொண்டு நிறுவனங்கள் செயல்படுத்திவரும் சமூகநல செயல்பாடுகளை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், அவர்களின் ஆதரவை திரட்டவும்  மாரத்தான் ஓட்டம், நடைபயணம், சக்கர நாற்காலி பயணம், உடற்பயிற்சி ஆகிவை அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் 18 தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக கடலூரில், குளோபல் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், அறிவுத்திறன் குறைபாடுடைய சிறப்பு குழந்தைகளின் பல்வேறு தேவைகள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைவரின் ஆதரவை பெறவும் சக்கரநாற்காலி பயணம், மூன்றுசக்கர வாகன பயணம், நடைபயணம் ஆகியவை அடங்கிய விழிப்புணர்வு பேரணி கடலூர், சுப்புராயலு நகர் 5 வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள குளோபல் சிறப்பு பள்ளியில் துவங்கி லாரன்ஸ் சாலையில் உள்ள ஜவான்ஸ் பவன் வரை நடைபெற்றது. இப்பேரணியை கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. பாலசுந்தரம் அவர்கள் கொடி அசைத்து துவக்கிவைத்தார். 


இப்பேரணியில் அறிவுத்திறன் குறைபாடுடைய சிறப்பு குழந்தைகள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளின் பலவேறு கோரிக்கைகளை குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது. கடலூர், பெரியார் அரசு  கலைக்கல்லூரியின் சமூகப்பணிதுறைத்  தலைவர் முனைவர். சேதுராமன்  அவர்கள் இப்பேரணியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். 


மேலும் கௌரவ பேராசிரியர்கள்  முனைவர். குமார்  மற்றும் வினோத் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு குளோபல் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் திருமதி. குமுதம் அவர்கள் தலைமை வகித்தார். முன்னதாக குளோபல் தொண்டு நிறுவன மேலாண்மை இயக்குநர். திரு. கோபால் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். நிறுவனத்தின் செயல் அலுவலர் கிறிஸ்டோபர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். 


இந்நிகழ்ச்சியில் பெரியார் அரசு கல்லூரி சமூகபணிதுறை மாணவர்கள் மற்றும் உன்னால் முடியும் தோழா மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் தலைவர்            திரு. முஸ்தபா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குளோபல் தொண்டு நிறுவன பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment