மிட் டவுன் ரோட்டரி மற்றும் இன்னர் வீல் சங்கமும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கினார்கள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 October 2022

மிட் டவுன் ரோட்டரி மற்றும் இன்னர் வீல் சங்கமும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கினார்கள்.

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கமும் சிதம்பரம் இன்னர் வீல் சங்கமும் இணைந்து சிதம்பரம் அடுத்த தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கினார்கள்.

முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி இன்று பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்குத் தேவையான இரண்டு மின்விசிறிகள், மூன்று நிற்கும் கரும்பலகைகள், கரும்பலகை அழிப்பாண்கள் சாக்பீஸ் டப்பாக்கள், பென்சில்கள், குப்பை கூடைகள் போன்ற பொருட்களை தலைமை ஆசிரியர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.


இந்த நிகழ்ச்சியில் இன்னர் வீல் தலைவி திருமதி. செல்வி முத்துக்குமரன், முன்னாள் தலைவிகள் சண்முகா ஜுவல்லரி திருமதி வரலட்சுமி கேசவன், திருமதி. எவரெஸ்ட் கோமதி கோவிந்தராஜன் மற்றும் இன்னர் வீல் சங்க உறுப்பினர்கள்,


சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க சாசன செயலாளர் மற்றும் முன்னாள் தலைவர் சண்முகா ஜுவல்லரி ஏ. எஸ். கேசவன், பொருளாளர் எல். சி. ஆர். கே. நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இறுதியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க பொருளாளர் எல். சி. ஆர். கே. நடராஜன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment