பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 28 October 2022

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்  நடைபெற்றது. 


கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. 


இக்கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முருகன், உதவி ஆசிரியர் நிர்மலா ,ஆகியோர் தலைமை தாங்கினார் ஆசிரியர் புவனேஸ்வரி, ரகுபதி, அருள் தேவி, சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆசிரியர் தீபா, லதா, அனைவரையும் வரவேற்றனர். 


இக்கூட்டத்தில் கல்வி மேலாண்மை குழுதலைவர் மற்றும் துணைத் தலைவர் மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவர்களும் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சிகள் குறித்தும் மாணவர்களின் காலாண்டு தேர்வின் தேர்ச்சி  விழுக்காடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. 


மேலும் வரும் பருவமழை காலங்களில் மாணவர்களின் நலன் கருதி பள்ளியில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஒருமனதாக  விவாதித்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு வாசித்தனர் நடைபெற்ற இந்த  மேலாண்மை குழு கூட்ட நிகழ்ச்சியில் அனைத்து உறுப்பினர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு இறுதியாக ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்தனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள "தமிழக குரல்https://cuddalore.tamilagakural.com/?m=1

No comments:

Post a Comment