தீபாவளி பண்டிகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் ரூ.14¾ கோடிக்கு மது விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.1 கோடி அதிகம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 October 2022

தீபாவளி பண்டிகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் ரூ.14¾ கோடிக்கு மது விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.1 கோடி அதிகம்

தீபாவளி பண்டிகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் ரூ.14¾ கோடிக்கு மது விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.1 கோடி அதிகம். 

தீபாவளி பண்டிகையையொட்டி, கடலூர் மாவட்டத்தில் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 2 நாட்களில், டாஸ்மாக் கடைகளில் ரூ.14¾ கோடிக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது.


தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மது பிரியர்கள், தங்களது நண்பர்களுடன் மது குடித்து பண்டிகையை கொண்டாடுவர். இதனால் வழக்கமான நாட்களைவிட பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகமாக நடைபெறும். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 147 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் தீபாவளி பண்டிகைக்காக அனைத்து கடைகளிலும் மது வகைகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டன.


அந்தவகையில், கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையொட்டி ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 2 நாட்களில் ரூ.14¾ கோடிக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது. அதன்படி தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 23ம் தேதி ரூ.7.28 கோடிக்கும், தீபாவளியன்று ரூ.7.44 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்று உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.1 கோடி அதிகம்.கடந்த ஆண்டு தீபாவளி அன்றும், அதற்கு முந்தைய நாளும் சேர்த்து ரூ.13.72 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது. சாதாரண நாட்களில் கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.3 கோடி முதல் ரூ.3½ வரை விற்பனை நடைபெறும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள "தமிழக குரல்https://cuddalore.tamilagakural.com/?m=1


No comments:

Post a Comment