"புனித வளனார் கலை & அறிவியல் கல்லூரியில்" "பெண் குழந்தைகள் காப்போம் பெண் குழந்தைக்கு கற்பிப்போம்" நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 15 September 2022

"புனித வளனார் கலை & அறிவியல் கல்லூரியில்" "பெண் குழந்தைகள் காப்போம் பெண் குழந்தைக்கு கற்பிப்போம்" நிகழ்ச்சி.


கடலூர் மஞ்சக்குப்பம் "புனித வளனார்  கலை & அறிவியல் கல்லூரியில்" "பெண் குழந்தைகள் காப்போம் பெண் குழந்தைக்கு கற்பிப்போம்" நிகழ்ச்சி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ஆ. கோமதி MSc அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் பிறப்பு பாலின விகிதம் பற்றிய விளக்கவுரை,குழந்தை பாலின குறைவால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும்,பெண் குழந்தைகள் பாதுகாக்க உதவும் சட்டங்கள் பற்றியும்,குழந்தைகளுக்கு எதிரான பாலின குற்றங்கள் தடுப்பு சட்டம் 2012 Pocso ACT 2012பெண் கல்விக்கு உதவும் திட்டங்கள்மற்றும் பெண் குழந்தைகள் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் உதவும் திட்டங்கள் மற்றும் இரும்பு சத்து உணவின் அவசியம் பற்றி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. 


நிகழ்ச்சியில் அனிமியா நோய் குறித்து தேர்வு நடத்தப்பட்டு முதல் ஐந்து இடங்களை பெற்ற மாணவிகளுக்கு குழந்தைகளுக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார திட்ட உதவியாளர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/