நிகழ்ச்சியில் அதிக குழந்தை பாலின விகிதங்களைக் கொண்ட பஞ்சாயத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு பலாமர கன்றுகள் மற்றும் பரிசுகள் பெண் குழந்தை பெற்ற பெற்றோர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிறப்பு பாலின விகிதம் பற்றிய விளக்கவுரை,குழந்தை பாலின குறைவால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும்,பெண் குழந்தைகள் பாதுகாக்க உதவும் சட்டங்கள் பற்றியும்,குழந்தைகளுக்கு எதிரான பாலின குற்றங்கள் தடுப்பு சட்டம் 2012 Pocso ACT 2012பெண் கல்விக்கு உதவும் திட்டங்கள்மற்றும் பெண் குழந்தைகள் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் உதவும் திட்டங்கள் பற்றி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் புதுக்கடை ஊராட்சி மன்ற தலைவர், மதலப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர், புதுக்கடை கிராம நிர்வாக அலுவலர், புதுக்கடை பள்ளி ஆசிரியர், வட்டார திட்டஉதவியாளர், அங்கன்வாடி பணியாளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment