கடலூரில் அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 September 2022

கடலூரில் அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு  வெளியானது. ஜூலை பதினொன்றாம் தேதி நடந்த பொதுகுழுகூட்டம் செல்லும் என்றும், அதிமுக பொது குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.


நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது, கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில், முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான எம்.சி .சம்பத் தலைமையில் கழக கொடி ஏற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார், மேலும் அதிமுக நிர்வாகிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் கடலூர் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி.ஜே.குமார், மீனவர் அணி செயலாளர் கே.என்.தங்கமணி ஒன்றிய செயலாளர்கள்  காசிநாதன், அழகானந்தம், ஒன்றியகுழு பெருந்தலைவர் தெய்வப்.பக்கிரி, வர்த்தக அணி வரதன், பகுதி செயலாளர்கள் கெமிக்கல் மாதவன், வி.கந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/