அமளியில் முடிந்த கடலூர் மாநகர மாமன்ற கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 September 2022

அமளியில் முடிந்த கடலூர் மாநகர மாமன்ற கூட்டம்.

கடலூர் மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் சுந்தரி ராஜா தலைமையில் மாமன்றத்தில் நடைபெற்றது, துணை மேயர் ப.தாமரைச்செல்வன் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் செயல் பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் மரு. அரவிந்த் ஜோதி  முன்னிலை வகித்தனர்.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் மேயர் சுந்தரி ராஜா பேசுகையில், முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கிறார், மேலும் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்க உள்ளார், இதன் காரணம் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் தங்கள் வார்டு பகுதியில் உள்ள பள்ளிகளில்  இந்த திட்டம் செயல்படுவதற்கு என்னென்ன பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதனை தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.


இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் ஒரு சில திமுக கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது மேலும் எங்கள் வார்டு பகுதிக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதில்லை, மேலும் எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் தகவல் தெரிவிப்பது இல்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர், மற்றொரு தரப்பு திமுக மாமன்ற உறுப்பினர்கள் திடீரென்று அமைச்சர் எம். ஆர் .கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் மேயர் சுந்தரி ராஜா தலைமையிலான மாநகராட்சி சிறப்பாக செயல்படுகிறது.

அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றது, என தெரிவித்தனர். அப்போது குறைகள் குறித்து தெரிவித்த திமுக மாமன்ற உறுப்பினர்கள் எங்கள் கேள்வி தொடர்பாக மேயர் மற்றும் அதிகாரிகள் பதில் கூற வேண்டும், அதற்கு மாறாக எங்கள் கேள்விக்கு எப்படி மாமன்ற உறுப்பினர்கள் பதில் கூற முடியும் என கூறினர்.


இதனால் இரு தரப்பினர் சேர்ந்த திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது மேயர் சுந்தரிராஜா துணை மேயர்.தாமரைச்செல்வன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நரேந்திரன் ஆகியோர் அவரவர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் குறித்து பதில் அளிக்கப்படும் ஆகையால் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டுமென தொடர்ந்து வற்புறுத்தினார்கள், அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மோதலாக மாறியது, இது மட்டுமன்றி பார்வையாளராக மாநகராட்சி கூட்டத்திற்கு வருகை தந்த ஒரு சிலர் திடீரென்று மாமன்ற உறுப்பினர்களிடையே நடைபெறும் காரசார விவாதத்தில் அவர்களும் தலையிட்டு பேசியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.


இந்நிலையில் மாமன்ற உறுப்பினர்கள் கீதா குணசேகரன், பிரகாஷ், சரத், தினகரன், ஃபாரூக்அலி, ஆறாமுதன், தமிழரசன், கர்ணன், சுமதி, ராதிகா, மகேஸ்வரி, கீர்த்தனா ஆகிய 11 மாமன்ற உறுப்பினர்கள் திடீரென்று மேயர் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது மாநகராட்சி கூட்டத்திற்கு திமுக மாமன்ற உறுப்பினர் ஃபாருக்அலி மற்றும் ஒரு சில திமுக மாமன்ற உறுப்பினர்கள், அலுவலக வளாகத்தில் வந்து கொண்டிருந்தபோது மற்றொரு தி.மு.க மாமன்ற உறுப்பினரின் கணவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென ஃபாரூக் அலியை  தாக்கினார்கள்.

இது சம்பந்தமாக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள், அப்போது மேயர் சுந்தரி ராஜா பேசுகையில் மாமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய முறையில் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் அவர்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார், மேலும் இப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்கள் உங்கள் பகுதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து தெரிவித்துள்ளீர்கள், இது சம்பந்தமாக அதிகாரிகள் என்னிடம் எதுவும் தெரிவிப்பதில்லை.


மேலும் அவர்கள் எடுக்கும் நடவடிக்கை குறித்தும் எனக்கு தெரியப்படுத்தவில்லை ஆகையால் நீங்கள் அதிகாரிகளிடம் வைக்கும் கோரிக்கையை சம்பந்தமாக என்னிடம் நேரில் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க ஏதுவாக  இருக்குமென கூறினார்.ஆகையால் நீங்கள் போராட்டத்தை கைவிட்டு தங்கள் இருக்கையில் அமர்ந்து கோரிக்கைகள் தொடர்பாக கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் தெரிவித்தார்.


அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூறுகையில் நாங்கள் மாமன்ற உறுப்பினர்கள்ஆனா எங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் மாநகராட்சியில் இல்லை மேலும் அதிகாரிகள் நாங்கள் வைக்கும் கோரிக்கைகள் தொடர்பாக உங்களிடம் தெரிவிக்க வேண்டும் ஆனால் அவர்கள் அலட்சியமாக இருப்பதால் நாங்கள் அதிகாரிகள் மற்றும் உங்களிடம் தனித்தனியாக கோரிக்கைகள் தெரிவிக்க வேண்டுமா என கேட்டனர் இதனை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினர்கள் புகார் அளிப்பதற்காக அங்கிருந்து எழுந்து சென்றனர்.


இதனை தொடர்ந்து மேயர் சுந்தரி ராஜா கூட்டம் முடிவு அடைந்தது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என கூறிச் சென்றார் அப்போது பாமக மாமன்ற உறுப்பினர் சரவணன் திடீரென்று கூட்டம் முடியவில்லை மேலும் அவர் கொண்டு வந்த கலங்கலான குடிநீரை அதிகாரியிடம் காண்பித்தார் இதனை தொடர்ந்து பிரகாஷ் மற்றும் 11 மாமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சி மாமன்ற உறுப்பினர் மீது தாக்கிய நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் நாங்கள் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆதரவாளர்கள் என்பதால் எங்கள் வார்டுகளை தொடர்ந்து புறக்கணிப்பதால் மக்கள் பெரிதும் பாதி ப்படைவதோடு அவர்களுக்கு கிடைக்க கூடிய அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை ஆகையால் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மீண்டும் மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனை தொடர்ந்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மேயர் சுந்தரி ராஜா குறித்து அவதூறாக பேசிய திமுக மாமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மாமன்ற உறுப்பினர்களின் கணவர்கள் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார் மாநகராட்சி கூட்டத்தை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆதரவாளர்கள் திட்டமிட்டு நடத்த விடக்கூடாது என்ற எண்ணத்தில் கூட்டத்தில் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக மாமன்ற உறுப்பினர்கள்  பிரசன்னா, இளையராஜா, பார்வதி, சாய் துர்னிஷா, விஜயலட்சுமி, ஹேமாவதி, செந்தில்குமாரி, சசிகலா, கிரேசி, கவிதா, சுபாஷினி, சங்கீதா, சுதா காங்கிரஸ் கட்சி சரஸ்வதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சரிதா உள்ளிட்ட 18 மாமன்ற உறுப்பினர்கள்மற்றும் ஆதரவாளர்கள் திடீரென்று மாநகராட்சி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள் அப்போது 18 மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அங்கிருந்த மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மீண்டும் வெளியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் தொடர்ந்து எம்எல்ஏ ஆதரவாளர்கள் 11 திமுக மாமன்றஉறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களும் மாநகராட்சி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள் அப்போது 11 திமுக மாமன்ற உறுப்பினர்கள்மற்றும் திமுக நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திமுக மாமன்றஉஉறுப்பினர்மீதுதாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தினர் இதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர் மேலும் மாநகராட்சி அலுவலகம் முழுவதும் கடலூர் காவல்துறை கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

*/