சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை துறை கூட்டு அரங்கில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 11வது வேளாண்மை கணக்கெடுப்பை சிதம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட புவனகிரி ஸ்ரீமுஷ்ணம் சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள களப்பணியாளர்களான கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் மேற்பார்வையாளர்களன வருவாய் ஆய்வாளர்கள் துணை வட்டாட்சியகர்களுக்கும் பயிற்சி வகுப்பினை கோட்டாட்சியர் க.ரவி தொடங்கி வைத்தார்.
சிதம்பரம் வட்டாட்சியர் அ.ஹரிதாஸ் சிறப்பு உரையாற்றினார், சிதம்பரம் கோட்ட புள்ளியில் உதவி இயக்குனர் கே.கனகேஸ்வரி, 11வது வேளாண்மை கணக்கெடுப்பு குறித்து கீழ்காணும் ஆறு பயிற்சி அளித்தார்., இக்கணக்கெடுப்பு பணி மூன்று முக்கிய கட்டங்களாக நடைபெற உள்ளது முதல் கட்டமாக 2021-22 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டுஒவ்வொரு கிராமத்தின் வருவாய்த்துறை பதிவேடுகள் மற்றும் பட்டா வாயிலாக நில கைப்பற்றுதாரர்களின் உரிமையாளர்கள் குத்தகைதாரர்கள் அவர்களின் சமூக பிரிவு பாலினம் குத்தகை விவரங்கள் சிறு குறு விவசாயிகளின் விவரங்கள் அனைத்து கைபேசி செயலி மூலம் சேகரிக்கப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக 2022-23 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வட்டாரத்தில் உள்ள மொத்த கிராமங்களில் இருந்து 20% கிராமங்களுக்கு மட்டும் பயிர் சாகுபடி விவரங்கள் நீர் பாசன விவரங்கள் மற்றும் நில குத்தகை விவரங்கள் சேகரிக்கப்படும், மூன்றாம் கட்டமாக 2023-24 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 7 சதவீதம் கிராமங்கள் மட்டும் தேர்வு செய்து அக்கிராமங்களில் விவசாயிகள் பயன்படுத்தும் இடுபொருள்கள் தொடர்பான விவரங்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
கடந்த பத்து வேளாண்மை கணக்கு கணக்கெடுப்புகளும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மனித ஆற்றலை மட்டுமே பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் தற்போது 11வது வேளாண்மை கணக்கெடுப்பு கணினி மயமாக்கப்பட்ட நிலப்பதிவுடான பட்டாவை அடிப்படையாகக் கொண்டு கைபேசி செயலி மூலம் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது என்பது சிறப்பு அம்சமாகும்.
நாடு முழுவதும் வேளாண்மை புள்ளிவிவரங்களை மேம்படுத்தும் பொருட்டு வேளாண்மை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது வேளாண்மை கணக்கெடுப்பின் மூலம் கைப்பற்றுதாரர்களின் நில உபயோகம் நீர்ப்பாசனம் நீர் பாசன ஆதாரம் நீர் பாய்ச்சப்பட்டு நீர் பாய்ச்ச படாத பரப்பு விவரங்களை சேகரிப்பதன் மூலம் புதிய வேளாண்மை வளர்ச்சி திட்டங்களை வகுப்பதற்கும் மற்றும் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கும் வேளாண்மை கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்படும் விவரங்கள் எதிர்காலத்தில் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
பயிற்சியின் இறுதியில் இக்கணக்கெடுப்பு நமது கோட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் சிறப்பாக நடைபெற அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு என்ன நல்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் க.ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்
இந்நிகழ்ச்சியில் வட்டார புள்ளியியல் ஆய்வாளர்கள் எம் விஜயலட்சுமி, கோ கலைவாணி, மு இளையராணி, இரா.அருள்பாவை, ப.கவிநிலவு, வ.வரதராஜன் ஆகிய உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment