வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை; நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 23 September 2022

வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை; நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை.

வடலூர் பேரூராட்சி அண்மையில் நகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்டது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும் வடலூர் நகராட்சி சார்பில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பல புதிய திட்டங்கள் வடலூர் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது இந்நிலையில் வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் நகராட்சி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படாமல் பொதுமக்கள் பயன்படுத்துவதால் நேய்த்தெற்று பரவும் நிலை நிலவி வருகிறது  கர்ப்பிணி பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தோறும் பரிசோதனை மேற்கொள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவது வழக்கம் இந்நிலையில் கழிப்பறை வசதி இல்லாமல் அவர்கள் இயற்கை உபாதை கழிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.


கண் பரிசோதனை பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளேயே மருத்துவர்கள் செவிலியர்கள் தங்கும் குடியிருப்புகள் பராமரிப்பின்றி உள்ளதால் மருத்துவர்கள் செவிலியர்கள் நகரத்தின் வெளியில் தங்கி மருத்துவமனையில் பணியாற்றவரும் அவள நிலை தொடர்கதை ஆகி வருகின்றது மருத்துவமனையில் உள்ள சுற்றுச்சூழல் அண்மையில் பெய்த மழையினால் இடிந்து விழுந்தது இதனால் இரவு நேரங்களில் சுற்றுசுவர் இல்லாமல் வெறும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதால் அதன் மிது ஏறி அவ்வழியே மருத்துவமனைகுள் அத்துமீறி சிலர் நுழைகின்றனர் இதனால் இரவு பணி மேற்கொள்ளும் செவிலியர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது.

மேலூம் வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள வட்டார தலைமை மருத்துவர் அரசு மருத்துவமனைக்கு தினமும் பணிக்கு காலை 11:30 க்கு மேல் வருவதும் மதியம் 2 மணிக்கு மேல் சென்று விடுவதும் தொடர்கதையாகி வருகின்றது இது குறித்து ஊழியர்களிடம் கேட்கும் நோயாளிகளுக்கு வட்டாரத்திற்குட்பட்ட மருத்துவமனைகளை சுற்றி பார்க்க செல்வதாக சொல்லி தன் சொந்த வேலைகளை கவனிப்பதாகவும் கூறப்படுகிறது  வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் பல நல்ல திட்டங்களை வடலூர் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொண்டு வருகின்றார் அவரின் சொந்த தொகுதியில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் மருத்துவர் அவரின் நற்பெயர்க்கும் தமிழக அரசிற்கும் அவபேரை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருவது பொதுமக்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் அரசு விதிகளுக்கு மாறாக ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணி செய்யும் அரசு அதிகாரிகளால் இது போன்ற நிலை தொடர்கதை ஆகி வருகின்றது


இது போன்ற அதிகாரிகள் மீது மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் அவர்கள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வடலூர் பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment