சேத்தியாத்தோப்பு அருகே உள்ள நெல்லிக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் .அபிஷேக் ஆகிய இளைஞர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பேருந்து நிறுத்தம் வளைவில் செல்லும் போது இருசக்கர வாகனத்தின் மீது விருதாச்சலத்தில் இருந்து புவனகிரி நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருந்த கார் மோதி இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு ஜெகன் என்ற இளைஞர் மீது மோதி இழுத்துச் சென்றதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் மற்றும் ஒரு இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இளைஞர் பலியானதை அடுத்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று திரண்டு சாலையில் தடுப்புகளை அமைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவலறிந்து வந்த சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தை நீண்ட நேரம் இழுபறியாக சென்ற நிலையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர் இந்த மூன்று மாதத்தில் இதே இடத்தில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மத்தியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இனிமேல் இப்பகுதியில் விபத்துக்கள் நடக்காத வண்ணம் தடுப்பு கட்டைகள் அமைத்துத் தரப்படும் என்றுஉத்தரவாதம் அளித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் சேத்தியாத்தோப்பு ஆனைவாரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
No comments:
Post a Comment