நந்தனார் கல்விக் கழகம் சார்பாக நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு குத்தகை நிலத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 September 2022

நந்தனார் கல்விக் கழகம் சார்பாக நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு குத்தகை நிலத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது !!!

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் கரைமேடு மற்றும் கொளக்குடி தலைக்குளம் ஆகிய கிராமங்களில் நந்தனார் கல்விக் கழகத்திற்கு சொந்தமான சுமார் இருபத்தி எட்டு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ள நிலையில் கரைமேடு, கொளக்குடி, தலைகுளம் ஆகிய கிராமங்களில் நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள நந்தனார் கல்விக் கழகத்திற்கு சொந்தமான சுமார் 28 ஏக்கர் விவசாய நிலங்களை கரைமேடு, கொளக்குடி, தலைக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 31 விவசாயிகளுக்கு குத்தகை நிலத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.


மேலும் குத்தகைக்கான ஆணையை விவசாயிகளிடம் நந்தனார் கல்வி குடும்ப தலைவர் மருத்துவர் சங்கரன்,  கனகசபை, செயல் தலைவர் பேராசிரியர் தெய்வநாயகம் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கினர். மேலும் நந்தனார் கல்விக் கழக உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் மேலும் குத்தகை முறையில் நிலம் அளித்த நந்தனார் கல்விக் கழகத்திற்கு பயனாளிகள் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

*/