தனி மனிதன் குடும்ப அமைதி மூலமே உலக அமைதி சாத்தியம் என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார் பெண்ணின் பெருமை என் உயிரும் தோன்றுவதற்கு ஏற்றதொரு திருவடி திருவடியாய் வல்லினமா பெண்ணினத்தை வடிவமைத்தான் அற்புதமே என்று பெண்ணின் பெருமை வேதாத்திரி மகரிஷி கூறுகிறார்.
மனைவி நல வேட்பு நாளை நினைவு கூறும் வகையில் வடலூர் மனவள கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு கவி நிகழ்ச்சி வடலூர் பண்ருட்டி சாலையில் உள்ள வசந்தம் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை டாக்டர் நடராஜன் செய்தார் ஜீவானந் உமா மகேஸ்வரி சிறப்பு தம்பதியினார் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை வடலூர் மனவள கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் கே பரமசிவம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயந்தி மோகன்தாஸ் அவர்கள் மனைவி நல வேட்பு நடத்தினார்.
விழுப்புரம் உலக சமுதாய சேவை சங்க முன்னாள் மண்டல தலைவர் பேராசிரியர் ராமமூர்த்தி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். பெண்ணின் பெருமை குறித்த சிறப்புரையை அருள்நிதி பொன்செல்வி அவர்கள் வழங்கினார்.
வடலூர் மனவள கலை மன்ற அருள் நிதி சத்யா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட தம்பதியினர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியை அருள்நிதி வீ, வினோதினி அவர்கள் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சி ஏற்புரை டாக்டர் ஜீவானந்த் வழங்கினார்.
வாழ்த்துரை அருள்நிதி அருள்செல்வன். அருள் துளசி நாத். அருள்நிதி அன்பழகன் வழங்கினார். சேகர் அவர்கள் மனவளக்கலை யோகாவை கற்ற டிப்ளமோ மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள் நிகழ்ச்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி இறுதியில் நன்றியுரை அருள் நிதி சேகர் அவர்கள் வழங்கினார்.
No comments:
Post a Comment