அவர்களுக்கு மாத்திரைகள் மட்டும் வழங்குவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து தனியார் மருத்திவமணைகளை நோக்கி செல்கின்றனர் பொருளாதரத்தில் பின்தங்கியுள்ளவர்களும் கடன் வாங்கியாவது தனியார் மருத்துவமணைக்கு சென்று வரும் அவலநிலை கடலூர் தலைலை அரசு மருத்துவமணையில் குழந்தைகள் பிரிவு,பெண்கள்பிரிவு மற்றும்,ஆண்கள் புற நோயாளிகள் பிரிவு காலை 8 மணிமுதல் 10 மணிவரை செயல்ப்படுகிறது பின்னர் 11மணிமுதல் 12மணிவரை பொதுபுற நோயாளிகள் பிரிவு செயல்ப்படுகிறது.
மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இரத்தம் மற்றும் சிறுநீர் மற்றும் பல பரிசோதனைகள் எடுப்பதற்கு எழுதிக்கொடுத்தால் பரிசோதனை கூடங்களில் கூட்டத்தைப்பார்த்ததும் பலர் வேதனையுடன் திரும்பிச்செல்லும் அவலநிலையும் உண்டு அதையும் சகித்து இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு சென்றால் பணியாளர் பற்றாக்குறையால் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் மேலும் தொற்றாநோய் பரிசோதனைக்கு வருபவர்களும் காய்ச்சல் பரிசோதனைக்குவருபவர்களும் ஒரே வரிசை மற்றும் ஒரேகவுண்ட்டரில் பரிசோதணைக்கு பதியவும் பரிசோதனை முடிவுக்களை அளிப்பதற்கும் ஒருவரே இருப்பதால் மருத்துவரிடம் பரிசோதனை முடிவுகளை காண்பித்து சிகிச்சைப்பெற தாமதமாகிவிடுகிறது.
இதனால் பல நோயாளிகள் காத்திருந்து ஏமாற்றத்துடன் நோயாளிகள் திரும்புகின்றனர் சில நேரங்களில் மருத்துவப் பணியாளர்களின் செயலால் நோயாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் மோதல்போக்கை உருவாக்குகிறது இதனை கருத்தில்க் கொண்டு பரிசோதனைகளை விரைந்து அளிக்க நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் வேகமாக பரவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment