வடலூர் அரசு கலைக் கல்லூரியில் முதல்நாள் வகுப்புகள் தொடக்கம் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 September 2022

வடலூர் அரசு கலைக் கல்லூரியில் முதல்நாள் வகுப்புகள் தொடக்கம் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின்   கீழ் அறிவித்தபடி கலை கல்லூரிகள் பட்டியலில் வடலூர் அரசு கலைக் கல்லூரி அன்மையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட மாணவர் சேர்க்கை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்று 05 .09 .2022 காலை 10 மணிக்கு மாணவர்களின் முதல் நாள் வகுப்பு தொடங்கப்பட்டது.



வகுப்பு தொடங்கும் முன் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் வடலூர் அரசு கலை கல்லூரி முதல்வர் ஐ.வண்ணமுத்து அவர்கள் தலைமையில் முனைவர் சி.ஆறுமுகம், தமிழ் துறை பேராசிரியர் முனைவர் பா .மணிவண்ணன், வணிகவியல் துறை பேராசிரியர் ஏ.எழில்மதி ,ஆங்கிலத் துறை பேராசிரியர் டீ. அருள் செல்வன் கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் புதிதாக முதல் நாள் வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்து கூறி வரவேற்றனர்.


இந்நிகழ்வில் மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

*/