தொழிற்பயிற்சி நிலைய தொழில்நுட்ப மைய பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 16 September 2022

தொழிற்பயிற்சி நிலைய தொழில்நுட்ப மைய பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மைய பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணிக்கு தமிழக அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் தல 3.73 கோடி நிதி ஒதுக்கீட்டில் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.

இதன் மூலம் இயந்திரவியல் தொழில்பயிற்சி பணிமனைகள் நான்கு வகுப்பறையில் கலந்தாய்வு அறை பணியாளர் அறை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது இதன் மூலம் இளைஞர்களுக்கு நவீன தொழிற்சாலைகளுக்கு ஏற்ப தானியங்கி ரோபோ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மின்சாரம் இயந்திரம் தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

மேலும் புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது, இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் வருடந்தோறும் சுமார் ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது, முன்னதாக கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் எம் .ஆர். கே. பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டடத்திற்கான அடிக்கல்நாட்டி பெயர் பலகை திறந்து வைத்தனர்.


மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. ஐயப்பன், சபா. ராஜேந்திரன், தி. வேல்முருகன், ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துணை மேயர் ப. தாமரைச்செல்வன், கடலூர் மாநகர திமுக செயலாளர் கே. எஸ் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி. பெருமாள், ரவிச்சந்திரன் மண்டல குழு தலைவர்கள் இளையராஜா, பிரசன்னா, த.சங்கீதா குமரன், சங்கீதா செந்தில், செந்தில் முருகன், மாணவரனி கே எஸ் ஆர் பாலாஜி, இளைஞரனி. கே .எஸ். ஆர். கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment