மேலும் சுத்துகுளம் ரெயில்வே கேட் அருகே தூங்கிகொண்டு இருந்த சதிஷ் என்பவரின் செல்போனை திருடு போனது சம்பந்தமாகவும் கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடிவந்தனர் இவ்வழக்குகளில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கடலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் உத்தரவிட்டார்.
கடலுார் துணை காவல் கண்காணிப்பாளர் S. கரிகால் பாரி சங்கர்
மேற்பார்வையில் கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் உதயகுமார், உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், முருகதாஸ் மற்றும் குற்றபிரிவு போலீசார் பழனிசாமி, பிரபாகரன், ஜெயராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையுனர் தீவிரமாக குற்றவாளிகளை தேடிவந்தனர் மேலும் இவ்வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சம்பவ இடங்களில் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று 05.09.2022 தேதி கஸ்டம்ஸ் அலுவலகம் அருகே போலிசார்
கண்காணித்து கொண்டு இருந்தபோது சந்தேகத்தின்பேரில் வந்த இருவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக கூரியவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் கடலூர் முதுநகர் மோகன்சிங் தெருவைச்சேர்ந்த பிரகாஷ் வயது 19, த/பெ கமல், மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (எ) அலெக்ஸாண்டர் வயது 23 த/பெ பாலகிருஷ்ணன் என்பதும் இவர்களிடம் தீர விசாரித்ததில் 3.9.2022 தேதி ஒரே நாள் இரவில் பல்சர் பைக் திருடி கொண்டு 3 வெவ்வேறு சம்பவ இடங்களில் செல்போன்களை திருடியதை ஒப்புகொண்டனர்.
அவர்களிடமிருந்து TN 31 CC 9010 கருப்பு கலர் பல்சர், 3 செல்போன்கள், 3 பித்தளை உண்டியல் தவளைகள் (மொத்த மதிப்பு ரூபாய் 1 லட்சம்) குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய இரும்பு கம்பி மற்றும் கத்திரிகோல் ஆகியவற்றை பறிமுதல் செய்து, குற்றவாளிகளைகைது செய்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment