கடலூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், நேரில் பார்வையிட்டு ஆய்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 21 September 2022

கடலூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், நேரில் பார்வையிட்டு ஆய்வு.

கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் தங்கராஜ்நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் வாயிலாக பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு சரியான நேரத்தில் வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பின்னர் குண்டுசாலை பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் பள்ளி மாணவியர்களுக்கு தயாரிக்கப்படும் காலை உணவு மாநகராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் ஒப்படைக்கப்படுவதையும் கேட்டறிந்து, சமையலுக்கு தேவையான உணவு பொருட்கள் இருப்பு கையேடு ஆய்வு மேற்கொண்டு, கையேட்டில் தெரிவித்துள்ளவாறு சரியான முறையில் இருப்பு உள்ளதா என நேரிடையாக ஆய்வு மேற்கொண்டார். 

தொடர்ந்து உணவு தயாரிக்கும் சமையல் அறை தூய்மையாக பராமரிக்கப்படுகின்றதா, மாணவியர்களுக்கான இன்றைய காலை உணவு அரசு அறிவுறுத்தியுள்ள வார நாட்குறிப்பேட்டில் தெரிவித்துள்ளவாறு உணவு வழங்கப்படுகின்றதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின் போது கடலூர் மாநகர மேயர் திருமதி.சுந்தரிராஜா, ஆணையர் நவேந்திரன், மாநகர தி.மு.க செயலாளர் கே.எஸ். ராஜா, மாநகர துணை மேயர்.பா.தாமரைச்செல்வன், நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி, செயற்பொறியாளர் புன்னிய மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.கீதா குணசேகரன், த.சங்கீதா, கே.எஸ். கார்த்தி, கே.ஏ.எஸ். பாலாஜி,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment