வெங்கடேஸ்வரா கம்யூனிட்டி காலேஜில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 September 2022

வெங்கடேஸ்வரா கம்யூனிட்டி காலேஜில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!!!

கடலூர் மாவட்டம் புவனகிரியில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கம்யூனிட்டி காலேஜில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தைத் திருமணம் தடுத்தல் மற்றும் இளம் வயது கர்பம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனர் சுதா தலைமை தாங்கினார், கல்லூரியின் முதல்வர் சுவாதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் புஷ்பவல்லி மற்றும் ஒருங்கிணைந்த சேவை மைய சமூகநலத்துறை வழக்கு ஆலோசகர் ராஜஸ்ரீ ஆகியோர் பங்கேற்று கல்லூரி மாணவிகள் மத்தியில் பெண்கள் பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் இடர்ப்பாடுகள் இன்னல்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் சமூகத்தில்  குழந்தை திருமணம் பாலியல் வன்கொடுமை போன்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு அரசு சார்ந்த உதவி மற்றும் வழிமுறைகளை எவ்வாறு பெறுவது என்பது பற்றிவிரிவான ஆலோசனை வழங்கப்பட்டது.


மேலும் எந்த நேரத்திலும் பெண்கள் குழந்தைகள் உற்றார் உறவினர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை உடனடியாக அரசைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து ஆலோசனை மற்றும் வழிமுறை பெறுவதற்கு இலவச தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டது இந்த  நிகழ்ச்சியில்  கல்லூரி விரிவுரையாளர்கள் மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரி இணை இயக்குனர் புரட்சியாளர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment