மாநில அளவிலான வெள்ளம் மற்றும் பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 September 2022

மாநில அளவிலான வெள்ளம் மற்றும் பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது !!!

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பு.கொளக்குடி கிராமத்தில் மாநில அளவிலான வெள்ளம் மற்றும் பேரிடர் காலமீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) திருமதி. கீதா அவர்கள் கலந்துகொண்டு தலைமை தாங்கினார்.


புவனகிரி வருவாய் வட்டாட்சியர் திருமதி. ரம்யா மற்றும் புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் வீரங்கள் (கி.ஊ)ஆகியோர்  முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புபணிஅலுவலர் அறிவழகன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் மக்கள் எவ்வாறு  பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் ஒத்திகை நிகழ்ச்சி செய்து காண்பித்தனர்.


மேலும் இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயலட்சுமி மற்றும் குழுவினர் பங்குகொண்டு மீட்பு மற்றும் மருத்துவ சிகிச்சை மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர் நிகழ்ச்சியில் உணவு மற்றும் நுகர்வோர் துறை  காவல்துறை  கால்நடை மருத்துவ குழுவினர் மின் பகிர்மான கழகம் கம்பி வழி பராமரிப்பாளர்கள்  தன்னார்வலர்கள் ஊர் பொதுமக்கள் வருவாய்த்துறை அனைத்து நிலை ஊழியர்களும்அதிக அளவில் கலந்து கொண்டனர்.


விழாவினை ஊராட்சி மன்ற தலைவர் செங்கோடன் சின்னமருது ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாவாடைராயன் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர கணேசன் கிராம உதவியாளர் கஜேந்திரன் ஆகியோர் சிறப்பு ஏற்பாட்டின் பேரில் அரசு அலுவலர்கள் மற்றும்  கிராமபொதுமக்களுக்கும் மதிய உணவு வழங்கி மகிழ்ந்தனர் மேலும் ஆதரவற்ற முதியவர்களுக்கு வேஷ்டி சேலை வழங்கினார்கள், நிகழ்ச்சியின் இறுதியில் துணை ஆட்சியர் ரத்தினகுமார் நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment

*/