விநாயகர் சிலை ஊர்வலத்தை பச்சைக் கொடி அசைத்து துவக்கி வைத்த இஸ்லாமிய சகோதரர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 August 2022

விநாயகர் சிலை ஊர்வலத்தை பச்சைக் கொடி அசைத்து துவக்கி வைத்த இஸ்லாமிய சகோதரர்.

குமராட்சி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை விழாவினை  முன்னிட்டு 16ம் ஆண்டு சிலை ஊர்வலம் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது.


சிறப்பு அழைப்பாளராக இஸ்லாமிய சகோதரர் அப்துல்பாசித் கலந்துகொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி பச்சை கொடி அசைத்து வைத்து சிலை ஊர்வலத்தை துவக்கி வைத்தார், முன்னிலை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வரதராஜன், ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க செயலாளர் சுவாமிநாதன், வர்த்தக சங்க செயலாளர் மணிவண்ணன், ஓய்வு பெற்ற மருத்துவ ஆய்வாளர் ஆறுமுகம், சமூக ஆர்வலர் திருமேனி, முன்னாள் ஊராட்சித் துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி,  PV.மாரியப்பன்,  உடன் டால்மியா வினோத், வார்டு உறுப்பினர் ராஜமலையசிம்மன், சபதி, கண்ணன், பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர் 


இறுதியாக மாலை 5 மணிக்கு ராஜன் வாய்க்காலில் சிலையை கரைத்தனர் இறுதிவரை குமராட்சி உதவி ஆய்வாளர் அண்ணாமலை மற்றும் தனி பிரிவு காவலர் கணேஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

No comments:

Post a Comment

*/