கடலூர் அனைத்து கட்சி மற்றும் குடியிருப்போர் பொது நல அமைப்புகளின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி சிபிஎம் அலுவலகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் திமுக மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா சி.பி.எம் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன் மாநகர செயலாளர் அமர்நாத் மாவட்ட குழு உறுப்பினர்கள் பக்கிரான் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மாநகர துணை மேயர் தாமரை செல்வன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப் அமமுக நிர்வாகிகள் அருள். வேலு மக்கள் நீதி மையம். மாவட்ட செயலாளர் மூர்த்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஷேக் மதரஸா சாகிப் குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன் தலைவர் வெங்கடேசன் பொதுநல அமைப்பின் தலைவர் திருவரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை கடலூர் திருப்பாப்புலியூர் என பெயர் மாற்றம் செய்திட வேண்டும், கடலூர் மாவட்டத்தின் தலைநகரமான கடலூரில் கொரானா ஊரடங்கு பிறகு ரயில்கள் இயக்கப்பட்ட பின் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற மன்னார்குடி ( 16179. 16180) காரைக்கால் விரைவு ரயில்கள் (16175. 16176) தற்போது நிற்பதில்லை இதனால் இரவு நேரத்தில் சென்னை செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் எனவே மீண்டும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16852) உழவன் எக்ஸ்பிரஸ் ( 16865. 16866) திருப்பதி 16780 வண்டிகளும் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும், கன்னியாகுமரி புதுச்சேரி 16862, மஹால் எக்ஸ்பிரஸ் 22623/ 22624 திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும், 06121/06122 சேலம் விருதாச்சலம் விரைவு ரயில் கடலூ துறைமுக சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும்.
மயிலாடுதுறையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் ஜனசதாப்தி 12083/12084 விரைவு ரயில் கடலூர் துறைமுக சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும், மயிலாடுதுறை இருந்து மைசூர்க்கு இயக்கப்படும்விரைவு ரயில் 16231 16232 கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை நீட்டிக்கவும் விழுப்புரம் தாம்பரம் பாசஞ்சர் துறைமுகம் சந்திப்பு வரை நீட்டிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் முழுவதும் மேல் கூரை வசதி குடிநீர் கழிப்பிடம் பயணிகள் தங்கும் ரூம் மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் எளியதாக வந்து செல்வதற்கு வசதிகள் கடலூர் துறைமுக சந்திப்பில் சைக்கிள் ஸ்டாண்ட் வசதி பிளாட்பாரம் முழுவதும் மேல்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உருவாக்கிட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு ஜூலை மாதம் திருப்பாப்புலியூர் ஆய்வாளர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தையும் ஆகஸ்ட் மாதம் கடலூர் ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது அதற்குப் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாத சூழ்நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளின் சார்பில் வரும் செப்டம்பர் 13அன்று காலை 10 மணிக்கு திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
மறியல் போராட்டத்திற்கு அனைத்து கட்சிகள் வர்த்தக அமைப்புகள் ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களும் ஆதரவு அளிக்க வேண்டுமென்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment