கடலூர் மாவட்டம் புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் சரவண ஜான்சிராணி தலைமை தாங்கினார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தின சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புவனகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கந்தன் புவனகிரி திமுக கழக ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் ஆகியோர் பங்கேற்று 236 மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி மாணவிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார்
மேலும் நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் லலிதா மணி முல்லை மாறன் கவுன்சிலர்கள் சண்முகம் செல்லப்பாண்டியன் திமுக நிர்வாகிகள் எழில்வேந்தன், தம்பா என்கின்ற ஜெயபிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment