இதனை முன்னிட்டு முன்னதாக நடைபெற்ற யாகசாலை பூஜையில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புண்ணிய நீர் வைக்கப்பட்ட கலசங்களுக்கு பல்வேறு மகா மந்திரங்கள் முழங்க பூஜைகள் பல காலங்களாக நடைபெற்றது, இதனை அடுத்து கொல்லிமலையில் இருந்து வரவழைக்கப்பட்ட யானை மீது புனித நீர் கலசங்களை ஊர்வலமாக கடம் புறப்பாடு நடைபெற்று புனித நீர் கலசம் மூலவர் கோபுரங்களில் மேல் கொண்டு செல்லப்பட்டு பின்னர் புனிதநீர் கோவில் கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் பக்தர்கள் யானையிடம் ஆசிர்வாதம் வாங்கி சென்றனர் இந்த கும்பாபிஷேக விழாவினை காண புவனகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து மூலவரை வணங்கி கும்பாபிஷேக விழாவை கண்டு தரிசனம் செய்தனர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment