பூ.மணவெளி கோதண்டகுளத்து ஸ்ரீசெடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 September 2022

பூ.மணவெளி கோதண்டகுளத்து ஸ்ரீசெடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

புவனகிரி அடுத்த பூ.மணவெளி கோதண்டகுளத்து ஸ்ரீசெடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சியாக நடந்தது. கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த பூ.மணவெளிகோதண்ட குளத்து ஸ்ரீசெடல் மாரியம்மன் கோவில் கடந்த 13 ஆண்டுகளுக்குப் பின் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நிர்வாக குழுவினர்களால் புதுப்பிக்கப்பட்டது. 


இதற்கான கும்பாபிேஷகத்தை முன்னிட்டு கடந்த 5 ம் தேதி காலை 10.00 மணிக்கு ஸ்ரீமகா கணபதி ஹோமம் மற்றும் நவகிரகஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. தினசரி பல்வேறு பூஜைகள் வெகு விமர்சியாக நடந்தது. இன்று காலை 7.00 மணிக்கு நான்காம் கால பூஜைகளுடன் பல்வேறு பூஜைகள் நடந்தது. காலை 10.30 மணிக்கு மேல் கடம் புறப்பாடு துவங்கி யானை மீது ஊர்வலமாக எடுத்து கோவிலை வலம் வந்து காலை 11.30 மணிக்குள் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை கடலுார் மோனசுந்தரசிவம் நடத்தி வைத்தார். 


சுற்றுபகுதியினர் பங்கேற்று சுவாமி தரினம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு சுவாமி வீதியுலா காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடக்கிறது. 

No comments:

Post a Comment

*/