பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி ஸ்ரீமதி பெற்றோரை நேரில் சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆறுதல் கூறினார் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 5 August 2022

பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி ஸ்ரீமதி பெற்றோரை நேரில் சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆறுதல் கூறினார்


பெரியநெசலூர் கிராமத்தில்  மாணவி ஸ்ரீமதி பெற்றோரை  நேரில்  சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆறுதல் கூறினார்


கடலூர் மாவட்டம்,  வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். மகள் ஸ்ரீமதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக்  பள்ளியின்  விடுதியில் தங்கி +2 படித்து வந்தார்.


இந்தநிலையில் கடந்த மாதம் 13 ம் தேதி பள்ளி வளாகத்தில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்


 இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் ஜீலை 3 ந் தேதி  மாலை பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள மாணவி ஸ்ரீமதி வீட்டிற்கு வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து  ஆறுதல் கூறினார்.



பின்னர் செய்தியாளர்கள்  சந்திப்பில்  பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி பள்ளியில்  12 ஆம் வகுப்பு சக்தி பள்ளியில் படித்து வந்த நிலையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும், இந்த செய்தியை அவர் குடும்பத்தார்கள் நேரில் சென்று ஆய்வு செய்தபோது அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும், அதில்  மர்மங்கள் நிறைந்த உள்ளது என்றும்,  எங்கள் பிள்ளை ஸ்ரீமதி பள்ளி நிர்வாக தரப்பில் இருப்பவர்கள் பாலியல் சீண்டலுக்கு  துன்பப்படுத்தி இருக்கிறார்கள் என்பது மட்டும் முதல் கட்டமாக பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததுமே வெளிவந்திருக்கிறது அந்த கோணத்தில் ஏன் விசாரிக்கவில்லை 

இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்  சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்.


மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து விசாரிக்கும்  சிபிசிஐடி விசாரணையை ஒரு காலக்கெடு நிர்ணயம் செய்து அதற்குள் முடிக்க அரசு உத்தரவிட வேண்டும் 


மாணவிக்காக  போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டிருக்கும் மாணவர்கள்   இளைஞர்களை  முதலமைச்சர் உடனடியாக விடுதலை வேண்டும். 



ஸ்ரீமதியின் தாயாருக்கு  அரசு வேலையும் அவரது குடும்பத்திற்கு சக்தி பள்ளி நிர்வாகத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் நிதி  பெற்று கொடுக்க வேண்டும் எனக்கூறினார். அப்போது அவருடன் மாவட்ட செயலாளர் அறிவழகன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்

No comments:

Post a Comment