பட்டூர் பஸ் நிறுத்தம் அருகே புளிய மரத்தில் பைக் மோதி விபத்து ஒருவர் பலி மற்றொருவர் காயம்
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், வேப்பூர் அருகேயுள்ள தொளார் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன் சத்யராஜ் வயது 30 என்பவரும், அவருடைய நண்பரான அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ஆனந்தன் என்பவரும் திட்டக்குடியில் இருந்து பெண்ணாடம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்
பட்டூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது நிலை தடு மோட்டார் சைக்கிள் புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது இதில் சத்யராஜ் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பலத்த காயமடைந்த ஆனந்தன் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்க பட்டுள்ளார் இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment