வேப்பூர் கூட்டுரோட்டில் மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணையை துரிதப்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனினஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 August 2022

வேப்பூர் கூட்டுரோட்டில் மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணையை துரிதப்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனினஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம்.

வேப்பூர் கூட்டுரோட்டில் மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணையை துரிதப்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனினஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம்.


கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. 


கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலமேலு தொடக்க உரையாற்றினார் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் அவர் பேசும் போது மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், பள்ளியில் நடந்த வன்முறையை காரணம் காட்டி கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை கைது செய்வதை கைவிடக் கோரியும், மாணவி ஸ்ரீமதி குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கண்டன பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உரையாற்றினார். 


கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மாதவன், ஜெய்சங்கர், மாநில குழு உறுப்பினர்கள் பத்ரி, ரமேஷ்பாபு, மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், உதயகுமார், மருதவாணன், கருப்பையன், வட்ட செயலாளர் அசோகன், தேன்மொழி, ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், சோமு, இளையராஜா திருஅரசு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் நிறைவாக திட்டக்குடி செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/