கடலூர் சிதம்பரம் சாலை மோகினி பாலம் அருகே சூரப்பன் நாயக்கன் சாவடி சுடுகாட்டில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு சுடுகாட்டிற்கு செல்லும் பாதைகள் மறைக்கப்பட்டும் அப்பகுதி வாய்க்கால் துர்ந்து இருந்தது மழைகாலங்களில் சரியாக மழை நீர் வடியாமல் இருந்தது மற்றும் அங்கு கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் இருந்தது அடிக்கடி குப்பைகை யாரேனும் கொளுத்தி விட்டார்கள் என்றால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கும்.
மேலும் துர்நாற்றம் வீசி வந்த நிலையில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பொதுமக்களுக்கு பெரும் சிரமமாக இருக்கும் இதுப்பற்றி நேற்று மேயர் சுந்தரி ராஜா கவனத்திற்கு சென்றதும் அதிரடியாக இரவு நேரம் என்றும் பாராமல் மேலே குறிப்பிட்ட இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு உடனடியாக அதிகாரிகளை வரவழைத்து அங்கு மலைபோல் குவிந்திருந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உத்திரவிட்டதைத் தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணியினையும் மேயர் சுந்தரி ராஜா பார்வையிட்டார் உடன் கடலூர் மாநகர தி.மு.க.செயலாளர் கே.எஸ்.ராஜா ,ஆணையர் நவேந்திரன்,நகர் நலஅலுவலர் அரவிந்த்ஜோதி,உதவிபொப் பொறியாளர் மகாதேவன், மாமன்ற உறுப்பினர் பிரசன்னா ஆகியோர் இருந்தனர் .
No comments:
Post a Comment