தற்போது அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,05,000 கன அடியாக உள்ளதால் அணைக்கு வரும் 1,05,000 கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் இன்று மாலை திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து
மழை பெய்து வருவதால் உபரி நீர் படிப்படியாக வினாடிக்கு 2,00,000 கன அடி வரை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, வெள்ள நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே நாளை இரவு 03-08-2022 முதல் வெளியேற்றப்படும். இதனால் கரையோரம் மற்றும் அதனைச் சார்ந்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கவோ, ஆற்றில் இறங்கி குளிக்கவோ, புகைப்படம், செல்பி அல்லது ஆற்றில் இறங்கி கடக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment