கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை முற்றிலும் சீரமைத்து போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 5 August 2022

கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை முற்றிலும் சீரமைத்து போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை முற்றிலும் சீரமைத்து போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



வடலூர் நகராட்சியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த கால்நடை மருத்துவமனை மூலம் பார்வதிபுரம், ஜோதி நகர், வள்ளலார் நகர், மாருதி நகர், கோட்டக்கரை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், கல்பட்டு நகர், சவேரியார் நகர், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. கதவு மற்றும் ஜன்னல்கள் உள்பட தரை தளம், மேல்மாடி ஆகியவை உடைந்து, விரிசல் அடைந்து காணப்படுகிறது.


மழைக்காலங்களில் கட்டிடம் முற்றிலும் நீர் கசிவு ஏற்பட்டு உள்ளே மருந்து, மாத்திரைகள் வைக்க முடியாத நிலை உள்ளது. மொட்டை மாடியில் செடி, கொடிகள் முளைத்து சிறிய தோட்டம் போல் காணப்படுகிறது. பாதுகாப்பின்றி உள்ள இக்கட்டிடத்தை சிலர் இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். எனவே கட்டிடத்தை முற்றிலும் சீரமைத்து போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment