நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அவர்கள், அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலர்கள், உச்சிமேடு ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார திட்ட உதவியாளர், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்து மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உரையாற்றினார்கள்.
மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்து மரக்கன்றுகளும், ஆரோக்கிய குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு பரிசுகளும் மாவட்ட திட்ட அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிறைவாக "தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி" தாரை தப்பட்டை இசை ஒலி உடன் நடைபெற்றது.
No comments:
Post a Comment