அதில் முதற்கட்டமாக கடலூர் துறைமுகத்தில் உள்ள தூய தாவீது மேல்நிலைப் பள்ளியில் காய்கறி தோட்டம், வாழை, முருங்கை மற்றும் பலவகை மரங்கள் கன்றுகளை தலைமையாசிரியர் திருமதி. கங்காதேவி தலைமையில் மாணவர்கள் பள்ளி வளாகம் மற்றும் பள்ளி தோட்டத்தில் மர கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை ஆசிரியர் லோகநாதன், பத்மநாபன், அலெக்ஸ், சாமுவேல், ராஜ், ஜஸ்டின் ,ஜெபராஜ் வில்சன், ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு முன் ஆசிரியர்கள் வகுப்பு வாரியாக மாணவர்களை பிரித்து விதைகள் செடிகள் மாணவர்களிடம் வழங்கப்பட்டு தலைமை ஆசிரியர் கங்காதேவி தலைமையில் நடப்பட்டது மேலும் தலைமை ஆசிரியர் கூறுகையில் இயற்கையை நாம் ஒவ்வொருவரும் நேசிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு தாவரங்களை எவ்வாறு எவ்வாறு விதைக்க வேண்டும் என்றும் அதை பாதுகாத்திடும் வழிமுறைகளையும் கூறினார் மேலும் இப்பள்ளியில் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கு இன்னும் பல செயல்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று தலைமையாசிரியர் திருமதி கங்காதேவி கூறினார்
No comments:
Post a Comment