கடலூர் அரசு மருத்துவமனை சார்பில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணியை துவைக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
தாய்ப்பாலை ஊட்டுவது இயற்கையின் கட்டளை மட்டுமின்றி தாய்மார்களின் தலையாய கடமையாகும், தாய்ப்பாலை சுவைப்பது குழந்தைகளின் பிறப்புரிமை,குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்ட வேண்டும் என்றும் சீம்பாலில் அதிக அளவிலான புரதச்சத்தும் வியாதிக் கிருமிகளை எதிர்க்கவல்ல அணுக்களும், ஒவ்வாமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் தன்மையும் உள்ளது, எனவே சீம்பாலை அவசியம் கொடுக்க வேண்டும் எனவும் மேலும் குழந்தைகளுக்கு தேன் மாட்டுப்பால் கழுதை பால் சக்கரை தண்ணீர் புகட்ட கூடாது மேலும் பிரசவ காலத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகுட்டுகிறார்கள் என்பதை உறுதி செய்திடுவோம் எனவும் கடலூர் அரசு மருத்துவமனை சார்பில் செவிலியர்களின் விழிப்புணர்வு பேரணியில் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா தலைமையில் ஊர்வலம் கடலூர் டவுன்ஹால் பகுதியில் துவங்கி அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் மரு. மீரா, மரு.காரல்,மரு.பரிமேலழகன்,மரு.பிரேமா, மரு.கவிதா,மரு.மதன்குமார், செவிலியர்.ஸ்டெல்லாமேரி மற்றும் மருத்துவமனைசெவிலியர்கள் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment