கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலைய சரகம் கோட்டகரை மனைவி சரஸ்வதி வயது 55 கனவர் பெயர் மகாலிங்கம் என்பவர் குடும்பப் பிரச்சினை காரணமாக தனது வீட்டின் பின்புறம் உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தானாக விழுந்துவிட்டதாக தகவல் கிடைத்தவுடன் வடலூர் காவல் ஆய்வாளர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் சரஸ்வதியை உயிருடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அசிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பெண்மணியை உடனடியாக மீட்டு, உயிரை காப்பாற்ற உதவி செய்த வடலூர் காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment