தமிழக அரசு அரசு பள்ளிகளில் 6- வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்று நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு 75 சதவீதம் அளவிற்கு சலுகை அரசே ஏற்றுக் கொள்ளும் என தமிழக முதல்வர் திட்டத்தை அறிவித்தார். அதனை செயல்ப்படுத்தும் விதமாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் ஏழ்மை எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பதாலும் சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும் அவர்களை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்கப்படுத்தி இலவசப் பயிற்சி அளித்து அவர்களும் ஒரு டாக்டராக வரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் குறிஞ்சிப்பாடி காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் செல்வம் அவர்கள் முழு முயற்சி எடுத்து இவருடன் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா உள்ளிட்ட அரசு பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பாலும் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6- வகுப்பிலிருந்து 12- வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து வரும் 11,12,வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மிக சிறந்த தகுதிவாய்ந்த ஆசிரியர்களால் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை (27-08-2022)காலை 9-30 மணி அளவில் தொடங்க இருக்கிறது.
ஆகையால் மாணவ மாணவிகள் தொடர்ந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று நீங்களும் ஒரு டாக்டராக தமிழகத்தில் பணிபுரிய வேண்டும் என்ற நல்லதொரு நோக்கத்தில் குறிஞ்சிப்பாடி காவல்துறை கல்வித்துறையில் முயற்சி எடுத்திருக்கிறது. இது முற்றிலும் இலவச பயிற்சி அது மட்டுமல்லாமல் அதற்குரிய புத்தகங்களும் இலவசமாக வழங்குகிறார்கள் இதை பயன்படுத்தி அரசு பள்ளிகளில் படிக்கும் நமது சுற்றுப்புற மாணவர் மாணவிகள் பயன்பெற வேண்டும் இது காவல்துறை முயற்சி எடுத்து நடத்துகிறது என்பதால் மிகவும் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பாகவும் நேர்மையாகவும் நீட் தேர்வு வகுப்பு பயிற்சி நடக்கும் பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகளை ஊக்கமளித்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள உங்களது பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென காவல் ஆய்வாளர் செல்வம் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
நீட் தேர்வு எழுத பயிற்சி வகுப்புகளுக்கு சேர்ந்து பல ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை செலவு செய்து பயிற்சி எடுத்து வருகிறார்கள் இந்நிலையில் குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் உங்களுக்கு இது முழுவதும் இலவசமாக பயிற்சி கிடைக்க முயற்சி எடுத்து உள்ளார்கள் மேலும் தகவலுக்கு காவல் ஆய்வாளர் 9443292098 மற்றும் காவல் உதவி ஆய்வாளர் 9498155196 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

No comments:
Post a Comment