மின் கட்டண உயர்வு முடிவை கைவிட வலியுறுத்தி சிதம்பரத்தில் சிம்னி விளக்கேந்தி கண்டன ஆர்ப்பாட்டம்!
மக்களை வதைக்கும் தமிழக அரசின் அநியாய மின் கட்டண உயர்வு முடிவை கைவிட வலியுறுத்தியும், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரத்தில் நகர தலைவர் அப்துல் கபூர் ஏற்பாட்டில் சிம்னி விளக்கேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொதுச்செயலாளர் முஹம்மது அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, தொகுதி, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மண்டல செயலாளர் M.A.ஹமீத் ஃப்ரோஜ் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment