திருவந்திபுரம் ஊராட்சியில் 7மாதமாக குடி தண்ணீர் வராததை கண்டித்து வாயில் கருப்பு துணி மற்றும் காலி குடத்துடன் ஒண்றியக்குழுக் கூட்டத்திற்கு வந்த துணைத்தலைவர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 August 2022

திருவந்திபுரம் ஊராட்சியில் 7மாதமாக குடி தண்ணீர் வராததை கண்டித்து வாயில் கருப்பு துணி மற்றும் காலி குடத்துடன் ஒண்றியக்குழுக் கூட்டத்திற்கு வந்த துணைத்தலைவர்

கடலூர் ஒன்றியம் திருவந்திபுரம் ஊராட்சியில் 7மாதமாக குடி தண்ணீர் வராததை கண்டித்து வாயில் கருப்பு துணி மற்றும் காலி குடத்துடன் ஒண்றியக்குழுக் கூட்டத்திற்கு வந்த துணைத்தலைவர் அய்யனார் திருவந்திபுரம் பஞ்சாயத்து 20-வது ஊராட்சி வார்டு ஒன்றிய  மலைசந்து மணல்வெளி தொடக்கப்பள்ளி, கேசவன் நகர் கிட்டத்தட்ட 500 குடும்பங்கள் உள்ளன. இங்கே 7 மாதமாக தண்ணீர் வரவில்லை. அதை பஞ்சாயத்து கிளார்க் இடம் முறையிட்டும் எந்த ஒரு பயனும் இல்லை.

பஞ்சாயத்து தலைவரிடம் குடிநீர் வரவில்லை என்று தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒன்றிய பெருந்தலைவர் தெய்வ.பக்கிரி அவர்களிடம் மனு கொடுத்தும், அதற்குமேல் ஊரக பஞ்சாயத்து BDO அவர்களிடம் முறையிட்டும் மனு கொடுத்தும் எந்த ஒரு பயன்பாடும் இல்லை. எல்லா அதிகாரிகளிடமும் முறையிட்டும் 7 மாதங்களாக தபால் கொடுத்தும் மக்களின் அடிப்படை பிரச்சனையான குடிநீர் தேவையை தீர்க்க எந்த ஒரு அரசியல்வாதியும் அதிகாரியும் வரவில்லை.என்று கூறி ஒண்றியகுழு கூட்டத்திற்கு வாயில் கறுப்பு துணிக்கட்டிக்கொண்டும் காலி குடத்துடன் துணைத்தலைவர் அய்யனார் வந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது

No comments:

Post a Comment

*/