மாளிகைமேடு அய்யனார் கோவிலில் உள்ள 101 கிலோ எடையுள்ள பித்தளை மணிகளை திருடும் 4 மர்ம நபர்கள் சிசிடி காட்சி மூலம் போலிசார் விசாரணை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 August 2022

மாளிகைமேடு அய்யனார் கோவிலில் உள்ள 101 கிலோ எடையுள்ள பித்தளை மணிகளை திருடும் 4 மர்ம நபர்கள் சிசிடி காட்சி மூலம் போலிசார் விசாரணை

மாளிகைமேடு அய்யனார் கோவிலில் உள்ள 101 கிலோ எடையுள்ள பித்தளை மணிகளை  திருடும்  4 மர்ம நபர்கள்  சிசிடி காட்சி மூலம் போலிசார் விசாரணை 


 கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள  மாளிகைமேடு கிராமத்தில் ஏரிக்கரை அருகே அய்யனார் கோவில் உள்ளது


 இந்த கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக  65 கிலோ எடையுள்ள ஒரு மணியும், தலா  6  கிலோ எடையுள்ள 6 மணிகளை பக்தர்கள் கோயிலில் கட்டியிருந்தனர்


ஆகஸ்ட் 2 ந் தேதி கோவிலுக்கு விளக்கு ஏற்றுவதற்காக அக்கோவில் பூசாரியான கலியன் மகன் சொக்கலிங்கம் சென்றுள்ளார்  

அப்போது கேட்டின் பூட்டு திறந்த நிலையில் கிடந்துள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் பூசாரி சொக்கலிங்கம் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 7 பித்தளை மணிகளையும் காணவில்லை  

இதனால் அக்கோவிலை நிர்வாகம் செய்யும் தர்மகர்த்தா கிருஷ்ணசாமிக்கு தகவல் கொடுத்தார்

அதனை தொடர்ந்து  கிராம மக்கள் சென்று  பார்த்து இந்து சமய அறநிலைய அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர் அதனை தொடர்ந்து கோவிலுக்கு வந்த  ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார்,  கோவில் தர்மகர்த்தா கிருஷ்ணசாமி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் சுமார் 10 பேர்  கோவில் வளாத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர்

அதில் நான்கு மர்ம நபர்கள் கோவிலில் மாட்டபட்டிருந்த 65 கிலோ எடையுள்ள மணியை வெட்டுரும்பு கொண்டு அறுத்தும், கோவிலில் உள்ள சூலத்தால் நெம்பியும் திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது 6 கிலோ எடையுள்ள 6 மணிகளும்,  65 கிலோ எடையுள்ள 1 மணி என. மொத்தம்   மொத்தம் 7  மணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் 


இது  குறித்து  சிசிடிவி காட்சியினை கொண்டு கிராம முக்கியஸ்தர்கள் 10 கொண்ட குழுவினர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் 


அதனை தொடர்ந்து வேப்பூர் போலிசார் மாளிகைமேடு அய்யனார் கோவில் மணிகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

No comments:

Post a Comment