தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குறிஞ்சிப்பாடி கோட்டத்தில் உள்ளதுணை மின் நிலையத்தில் மேம்பாட்டு திட்ட அடிப்படையில் 10 எம்விஏ திறனிலிருந்து புதியதாக 16 எம்விஏ திறன் கொண்ட மின்மாற்றி ரூ.80.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளதை, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்து பேசுகையில் தரம் உயர்த்தப்பட்ட திறன் மின்மாற்றியால் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், மேலும் வருங்காலங்களில் ஏற்படும் கூடுதல் மின் பளுவையும் சரியான மின் அழுத்தத்தோடு வழங்க முடியும். இந்த புதிய தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றியின் மூலம் 1300 விவசாய மின் இணைப்பாளர்களும், 20900 பொது மின் இணைப்பாளர்களும் பயன்பெறுவார்கள்.
மேலும், இதன் மூலம் குறிஞ்சிப்பாடி, கஞ்சமாநாதன்பேட்டை, விருப்பாச்சி. இராசாக்குப்பம், சமத்துவபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மற்றும் நகரப்பகுதிகள் மின் நுகர்வோர் பயன்பேறுவர் என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment