கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மெஷின் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.பாலசுப்பிரமணியன் அவர்களின் ஆணைக்கிணங்க ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி ராமலிங்கம் தலைமையில் ஊராட்சி மன்ற துணை தலைவர் அன்னக்கிளிஇளந்திரையன் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி ஊராட்சி செயலாளர் பழனி இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய மாநில அரசுத் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து விளக்கி வாசித்தனர் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் மருதூர் ஊராட்சியில் 2022. 2023 ஆம் ஆண்டுக்கான திட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளனர் இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment