கடலூர் மாவட்டத்தில், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர்உதவித்தொகை, விதவை உதவித்தொகை வழங்கப்படுவதை முன்னறிவிப்பு ஏதுமின்றி சுமார் 18,000 பேருக்கு நிறுத்தப்பட்டுள்ளது என கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.அருண்மொழிதேவன் குற்றச்சாட்டு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 August 2022

கடலூர் மாவட்டத்தில், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர்உதவித்தொகை, விதவை உதவித்தொகை வழங்கப்படுவதை முன்னறிவிப்பு ஏதுமின்றி சுமார் 18,000 பேருக்கு நிறுத்தப்பட்டுள்ளது என கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.அருண்மொழிதேவன் குற்றச்சாட்டு.


கடலூர் மாவட்டத்தில், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர்உதவித்தொகை, விதவை உதவித்தொகை வழங்கப்படுவதை முன்னறிவிப்பு ஏதுமின்றி சுமார் 18,000 பேருக்கு நிறுத்தப்பட்டுள்ளது என கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.அருண்மொழிதேவன் குற்றச்சாட்டு.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை, ஆதராவற்றோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை போன்றவை எவ்வித முன் அறிவிப்பும் இன்றிசுமார் 18, ஆயிரம் பேருக்கு மேல் நிறுத்தப்பட்டுள்ளது. அரசின் உதவித்தொகை பெற்று வந்தர்களுக்கு திடீரென நிறுத்தப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.


இந்த உதவித்தொகையை மட்டுமே நம்பி ஜீவனம் செய்து வந்த முதியோர் உள்ளிட்டவர்கள், என் போன்ற மக்கள் பிரதிநிதிகளிடம் தங்களது வேதனையை தெரிவித்து விடுகின்றனர். ஒரு வேளை சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்படுவதாக தெரிவிக்கின்றனர்.


நாங்கள் செல்லும் இடமெல்லாம் இப்படி பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நேரிடுகிறது. உதவித்தொகை மாதா மாதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் திடீரென, நிறுத்தப்படுவது அநீதியாகும்.


திடீரென கடலூர் மாவட்டத்தில் உதவித்தொகை நிறுத்தப்பட்டவர்கள் ஒருவருக்குக் கூட நிறுத்தப்பட்டதற்கான காரணம் முறைப்படி தெரிவிக்கப்படவில்லை, அவர்களுக்கு உரியகாரணத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எழுத்து மூலமாக தெரிவித்து இருக்கவேண்டும்.


எனவே, உடனடியாக நிறுத்தப்பட்டுள்ள முதியோர், ஆதரவற்றோர், விதவை உதவித் தொகையினை சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை உட்பட மாதா மாதம் உதவித்தொகைகளையும் உடனே அனுப்ப வேண்டும் என்று கடலூர் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

*/