தமிழ் வழி கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் மையம் தொடங்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 August 2022

தமிழ் வழி கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் மையம் தொடங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி யில்  தமிழ் வழி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது, நிகழ்ச்சியில் ஆங்கில முதுகலை ஆசிரியர் கோவி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.


குறிஞ்சிப்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தே. செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார், உதவி ஆய்வாளர் சு.பிரசன்னா அவர்கள் முன்னிலை வகித்தார், மேலும் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ துறையில் கல்வி பயில நீட் தேர்வில் வெற்றி பெற குறிஞ்சிப்பாடி காவல்துறையின் முயற்சியால் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.


மாணவர்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் A.ஆரோக்கியராஜ் அவர்கள் தெரிவித்தார்.


இம் மையத்தில் நீட் பயிற்றுநர்களாக வேதியல் பாடத்தில் R .குரு பிரசாத் மற்றும் இரா.பெரியார் செல்வம் அவர்களும் விலங்கியல் பாடத்தில் வி. வினோதினி அவர்களும் தாவரவியல் பாடத்தில் S. தமிழ்ச்செல்வி அவர்களும் இயற்பியல் பாடத்தில் வை.தாமோதரன் அவர்களும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்  மேலும் நீட் ஒருங்கிணைப்பாளராக த. நிசாரூதீன், இரா. பெரியார் செல்வம் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக அருண் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

*/