சிதிலமடைந்து காணப்படும் மின்வாரிய அலுவலக பணம் செலுத்தும் கவுன்டர் மேற்கூரைகளும் பேயர்ந்து இருப்பதால் மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் அச்சம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் இயங்கி வரும் கடலூர் மாவட்டம் வடலூர் இளமை பொறியாளர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அலுவலகம் வடலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே வாடகை கட்டிடத்தில் நீண்ட நாட்களாக இயங்கி வருகின்றது நகரப் பகுதி சேர்ந்த அனைத்து மின்துறை சம்பந்தமான பணிகளும் இவ்வலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம் வடலூர் நகர எல்லைக்கு உட்பட்ட அலுவலகம் என்பதால் பொதுமக்கள் அதிகளவில் தினமும் புதிய மின் இணைப்பு மற்றும் மின்சாரம் குறித்த புகார்களுக்கு அலுவலகத்தை நோக்கி வந்து செல்கின்றனர்.
இக்கட்டிடத்தின் ஒரு பகுதியில் மின் கட்டண வசூல் மையம் இயங்கி வருகின்றது இங்கு மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் கட்டிடத்தின் ஓட்டி வெளி பகுதியில் சிமெண்ட் சீட்டுகளால் அமைக்கப்பட்ட ஷட் போன்ற அமைப்புக்கு கீழே காத்திருந்து தங்கள் கவுண்டரில் மின்கட்டணத்தை செலுத்துவார்.
இந்நிலையில் பொதுமக்கள் காத்திருக்கும் ஷெட் பராமரிக்கப்படாமல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது சிமெண்ட் சீட்டுகள் மற்றும் சிமெண்ட் கட்டைகள் மிகவும் சிதலமடைந்து மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
கட்டிடத்தில் உள்ள ஜன்னல்களும் சிமெண்ட் காங்கிரட்டுகளில் பிளவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது மழைக்காலம் என்பதால் பெறும் விபத்து ஏற்படும் முன் இதனை சரி செய்து மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வடலூர் மின் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஷட்டை ஒட்டி மின் கட்டண திருத்தம் 2022 பேனர் மிகபெரிய அளவில் மின்சாரம் செலுத்தும் கவுண்டரை மறைக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளதால் கவுண்டர் திறந்து உள்ளதா அல்லது மூடப்பட்டுள்ளதா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
No comments:
Post a Comment