புவனகிரி அருகே லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 August 2022

புவனகிரி அருகே லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது !!!

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கொத்தட்டை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் பார்த்தசாரதி என்பவர் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கரிக்குப்பம் கிராமத்தில் விவசாய வேலை பார்த்து வரும் அன்பழகன் என்பவர் அவருடைய விவசாய நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் பாரத சாரதியிடம்  கேட்டுக்கொண்டுள்ளார் அதற்கு கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி  ரூபாய் 10 ஆயிரம் லஞ்சமாக விவசாயி அன்பழகன் இடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


அதிர்ச்சி அடைந்த விவசாயி அன்பழகன் கடலூர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயி அன்பழகன் இடம்  கொடுத்து கொடுக்க செய்துள்ளனர், அதன்படி அன்பழகன் ரசாயனம் தடவிய நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் பாரத சாரதியிடம் கொடுத்துள்ளார்.


அருகில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியை கையும் களவுமாக கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

*/