வடலூர் நகராட்சியில் எனது குப்பை எனது பொறுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 August 2022

வடலூர் நகராட்சியில் எனது குப்பை எனது பொறுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

தமிழக அரசு சுத்தமான பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் வகையிலூம் பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை அனைத்து பகுதிகளிலூம் ஏற்படுத்த வேண்டும் என்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதனைதொடர்ந்து வடலூர் நகராட்சி சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வடலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார், வடலூர் நகராட்சி (பொறுப்பு) ஆணையர் இரா.சேகர் அவர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்பாடினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார் மேலும் அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் தூய்மை பணியாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் பொழுது பொதுமக்கள் வழங்கும் குப்பைகளை மக்கும் குப்பை மக்கா குப்பை என்று தரம் பிரித்து சேகரிக்க வேண்டும் அப்படி தரம் பிரிப்பதால் மக்கும் குப்பைகள்  இயற்கை உரமாக பயன்படுத்தலாம் எனவும் மக்காத குப்பையை தொழிற்சாலர்களுக்கு அனுப்பி மறுசுழற்சி  முறையில் வேறு ஏதேனும் பொருட்கள் தயார் செய்ய பயன்படுத்தலாம் எனவும் எடுத்துரைத்தார்.


நிகழ்ச்சியில் கொரோனா நோய் தொற்று காலத்தில் நோய் தொற்றை எதிர்கொள்வதில் சிறப்பாக களப்பணியாற்றிய  தூய்மை பணியாளர்கள் ஆறுமுகம், ராஜேந்திரன் சாரங்கம் ஆகியோருக்கு சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது,  மேலும் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய மருத்துவர் சரவணன் மற்றும் பாலாஜி ஆகியோருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


சிறந்த பள்ளி ஆசிரியருக்கான சான்றிதழ் மெட்டில்டா சகாயமேரி, நாகஜோதி,மின்வாரிய ஊழியர் சிவகுமார், சிறந்த உணவகத்திற்கான சான்றிதழ் வடலூர் இராமலிங்க ஆண்டவர் உணவக உரிமையாளர் கலைச்செல்வன் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில்  சந்திரகாசி ,குடியுரிமை நல சங்க சார்பில் ராமமூர்த்தி சிறந்த சமூக சேவகர் ரமா பிரபா அகியோர்களுக்கு வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் திமுக வடலூர் நகரச் செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் வடலூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் நகராட்சி பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/