மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில்மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பணிநியமன ஆணையினை வழங்கினார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் உள்ள வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன் முன்னிலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தேர்தெடுக்கபட்டுள்ள வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்ததாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் இதுவரை சுமார் 63 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என்ற உயரிய நோக்கில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கடலூர் மாவட்டம் அதிக கிராம பகுதிகளை கொண்டது, கிராம பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பை பெறுவதன் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுவதுடன், வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள் என தெரிவித்தார்.
இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கடலூர் மாவட்டத்தை சார்ந்த 5713 வேலை நாடுநர்கள் பங்கேற்றுள்ளனர். இம்முகாமில் 189 தனியார் நிறுவனங்களை சார்ந்த வேலை அளிப்போர் கலந்துகொண்டு நேர்காணல் நடத்தி தங்களுக்கு தேவையான் பணியாளர்களை தேர்வு செய்தனர். தொழில் நிறுவனங்களுக்கு எனது அன்பான வேண்டுகோள், தாங்கள் நிர்ணயித்த இலக்கில் பணியாளர்களை இந்த முகாமின் மூலம் தேர்வு செய்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து அவர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 1052 பணியாளர்களுக்கு பணி நியமண ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1396 வேலைநாடுநர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்தெடுக்கபட்டுள்ளனர். 26 இளைஞர்கள் திறன் பயிற்சிக்காக பதிவு செய்தனர். 41 வேலை நாடுநர்கள் அயல்நாட்டு வேலைவாய்பிற்காக விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். மேலும் வேலை நாடுநர்கள் கிடைத்த வேலையில் உடனடியாக சேர்ந்து பயனடைய வேண்டும், கிடைத்த வேலையை ஆரோக்கியமாக எடுத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும். இளம் வயதிலேயே தங்களுக்கென ஒரு வேலையை பெற்று உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.இராதாகிருஷ்ணன் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் K.ஜெகதீசன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை)சந்திரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்(பொ) திரு.பாலமுருகன், பண்ருட்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் சபா.பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனத்தினர், வேலை நாடுநர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment