புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுகாதார கல்வி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உடல் பருமன் மதிப்பீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 31 July 2022

புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுகாதார கல்வி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உடல் பருமன் மதிப்பீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுகாதார கல்வி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உடல் பருமன் மதிப்பீடு  விழிப்புணர்வு நிகழ்ச்சி.



புதுச்சேரி,  கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

  

பொது சுகாதாரத்துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு இணைந்து கிருமாம்பாக்கத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கார் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார கல்வி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன் மதிப்பீடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஹெல்த் சயின்ஸ் துறை டீன் பேராசிரியர் டாக்டர் பி.செந்தில்குமார் ஆலோசனையின் படி இயக்குனர் பொறுப்பு திரு ஆண்ட்ரூ ஜான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு டாக்டர் அம்பேத்கர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு விஜயகணேஷ் மற்றும் திருமதி ரங்கநாயகி, ஓவிய ஆசிரியர் சண்முகம் மற்றும் பெனடிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களிடம் உயரம், எடை, சுற்றளவு போன்ற கணக்கீடு எடுக்கப்பட்டு உடல் பருமன் மதிப்பீடு செய்யப்பட்டது.சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். முடிவில் புதுச்சேரி பிரிவு இயக்குனர் திரு ஆண்ட்ரூ ஜான் அவர்கள் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி திரு சந்துரு ,உதவி பேராசிரியர்கள் கிருஷ்ணகுமார், டாக்டர் சவிதா, ஐயம்மா, தமிழ்ச்செல்வன், மோகனப்பிரியதர்ஷினி, மற்றும் அன்புநிலவன் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment