கடலூரில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 August 2022

கடலூரில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு


சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாடிவரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கத்தில் Chess Movement நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் முன்னிலையில் கடலூர் மாநகர மேயர் சுந்தரிராஜா  பங்கேற்று துவக்கிவைத்தனர்.
நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட்  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவர்கள் மல்யுத்தம்,சிலம்பாட்டம் மற்றும் யோகா கலைகள் மூலம் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப்பற்றி மாணவர்கள்  விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர் மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் மற்றும் மேயர் சுந்தரி ராஜா ஆகியோரும் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக விளையாடினார்கள்  இந்நிகழ்ச்சியில் கடலூர் தி.மு.க.மாநகரசெயலாளர் கே.எஸ்.ராஜா,மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா மற்றும் பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment