2.06 லட்சம் கோடி தொழில் முதலீட்டை கை நழுவ விட்டு தமிழக இளைஞர்களுக்கு துரோகம் செய்துவிட்டது திமுக அரசு. முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றச்சாட்டு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 1 August 2022

2.06 லட்சம் கோடி தொழில் முதலீட்டை கை நழுவ விட்டு தமிழக இளைஞர்களுக்கு துரோகம் செய்துவிட்டது திமுக அரசு. முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றச்சாட்டு.

 


.2.06 லட்சம் கோடி தொழில் முதலீட்டை கை நழுவ விட்டு தமிழக இளைஞர்களுக்கு துரோகம் செய்துவிட்டது திமுக அரசு. முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றச்சாட்டு.


கடலூர் ஆகஸ்ட் 1:- 2.06  லட்சம் கோடி தொழில் முதலீட்டை விட்டு தமிழக இளைஞர்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துவிட்டது என முன்னாள் தொழில்துறை அமைச்சரும் அதிமுக வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எம்.சி.சம்பத் குற்றச்சாட்டுதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,



தொழில்துறையில் தொடர் முயற்சியால் இந்தியாவில் மூன்றாவது இடத்தை பிடித்த மாநிலம் தமிழ்நாடு என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மார்தட்டிக் கொள்கின்றார். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி என்ன என்று யாராவது அவருடைய கவனத்திற்கு எடுத்து சென்றார்களா என்ற ஐயப்பாடு எனக்கு உள்ளது.  தமிழகத்தில்  தொழில் துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கின்றார்?. தமிழகம் ஒரு நிமிடத்திற்கு மூன்று கார்களை உற்பத்தி செய்த பெருமையை பெற்று, ஆண்டுக்கு 16 லட்சம் கார் உற்பத்தி செய்து   உலக அளவில் கார் உற்பத்தியில் முதல் 10 இடத்திற்குள் உள்ள மாநிலமாக கழக ஆட்சி காலத்தில் விளங்கியது


 தற்போது உலக அளவில் செமி கண்டக்டர் தட்டுப்பாடு காரணத்தால் கார் உற்பத்தி இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேதாந்தா நிறுவனமும், பாக்ஸ்கான் நிறுவனமும் கூட்டு முயற்சியில் 2.06 லட்சம் கோடி முதலீட்டில் புதிதாக  தொடங்க உள்ள  செமி கண்டக்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழக தொழில்துறை கைநழுவ  விட்டது நியாயம் தானா?. இது தமிழ்நாட்டின் தொழில்  வளர்ச்சிக்கு உகந்ததா. தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருபவர்களிடம்  (ஐடிசி) சில துறைகள்  கலந்து பேசி அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இன்சென்டிவ் மானியத்தை முறைப்படி கொடுத்து அவர்களை வரவேற்பது தான் தமிழக தொழில் வளர்ச்சிக்கு உகந்த நிலைப்பாடு. காரணம் என்னவென்றால் நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருகின்ற மிகப்பெரிய நிறுவனம். இந்த நிறுவனத்தை முறைப்படி கையாண்டு இருந்தால் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கி இருப்பார்கள். ஏன் முறைப்படி கையாளவில்லை என்பதுதான் தமிழகத்திலுள்ள தொழில் நிறுவனங்களுக்கு ஒரு விந்தையான கேள்வியாக உள்ளது.


 இதுவரை 2.06 கோடி ஒற்றை முதலீடு செய்யும் முதலீடு தொழில் முதலீட்டாளர்களிடம் இருந்து இதுவரை வந்ததில்லை .

இந்த முதலீடு வந்து இருந்தால் மேலும் தமிழ்நாடு இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாநிலமாக மாறி இருக்கும். முயற்சிகளையும் செய்தோம் ஆனால் அனைத்து நிறுவனங்களும் தமிழகத்தில் தான் முதலீடு செய்வார்கள் என நினைக்க கூடாது என்று அதிகாரிகள் கூறியதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. இது எந்த நிலைப்பாட்டை எதிர்நோக்கி நோக்கி தமிழக தொழில்துறை சென்று கொண்டிருக்கிறது என்பது தமிழக மக்களின் மனதில் வியப்பான  கேள்வியாக  உள்ளது.  இந்த நிலைப்பாடு எல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியுமா.


 


எடப்பாடியார் அரசாக இருந்தால் நாங்கள் இந்த தொழிற்சாலையை கைநழுவ விட்டு இருப்போமா.  கழக  அரசாக இருந்திருந்தால்  இதை திறம்பட கையாண்டு  இந்த தொழிற்சாலையை தமிழ்நாட்டில் தொடங்க வைத்திருப்போம். கடந்த ஐந்தாண்டு கழக ஆட்சி காலத்தில் தொழில் முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலமாக, தொழில் முதலீட்டாளர்கள்  விரும்புகின்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டு கழக ஆட்சியில்  எந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க  வந்தாலும் அவர்கள் கேட்பதை, விரும்புவதை கேட்டு,ஏற்று செய்த அரசு கழக அரசு. 2.06 லட்சம் கோடி  ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனத்தை  எளிதாக கைவிட்டது நியாயம் தானா. நம் நாட்டின் எதிர்கால சந்ததிக்கு, இளைஞர்களுக்கு  மிகப்பெரிய துரோகத்தை திமுக அரசு செய்துவிட்டது.


 


மாநில அரசின் மானியம் கொடுக்கின்ற நிகழ்வுகளை  முன்பின் தளர்த்தி அவர்களுக்கு வழங்க வேண்டியதை வழங்கி பிற்காலத்தில் வருகின்ற வரி வருவாயை  கணக்கிட்டு இந்த தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்க முயற்சி செய்திருக்க வேண்டும். அதைவிட்டு தமிழகத்திற்கு  மிகப்பெரிய இழப்பை இந்த நிறுவனத்தை கைவிட்டது மூலம் செய்திருக்கின்றது திமுக அரசு.  இது மிகவும் நியாயமற்ற செயல்.  ஏன் ஸ்டாலின் அரசு  இந்த தொழிற்சாலையை கைநழுவ விட்டது  என்று தொழில் முதலீட்டாளர்கள், மத்தியில் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வி எழும்புகின்றது. இதற்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.  கழக அரசின் கடந்த  ஐந்தாண்டின்  தொடர்  முயற்சியாலே  தொழில் துறை தற்போது மூன்றாவது இடத்திற்கு  வந்துள்ளது. திமுக அரசின்  ஓராண்டு ஆட்சியால்  மூன்றாவது இடத்திற்கு வந்து விட முடியாது. செமி கண்டக்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை  தமிழகத்திலேயே அமைந்ததிருந்தால் கார் உற்பத்தி மேலும் தமிழகத்தில் அதிகரித்திருக்கும். தற்போது செமி கண்டக்டர்கள்  தயாரிக்கும் தொழிற்சாலைகள் வேறு மாநிலத்தில் தொடங்கப்படுவதால் புதிய கார் தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வருவதும் கேள்விக்குறியாகும். இதையெல்லாம் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.


 இந்த தொழிற்சாலையை விஷயத்தில் மானியத்தை மட்டும் கணக்கிட்டு அரசு கருதாமல்  ரெண்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருகின்ற விஷயத்தை தான் அரசு பெரிதாக கருதி இந்த விஷயத்தை அரசு கையில் எடுத்து இருக்க வேண்டும்.  2.06 லட்சம் கோடி  ரூபாய் தொழில் முதலீடு வேறு மாநிலத்திற்கு சென்று விட்ட நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் 2030க்குள் ஒரு  லட்சம் ட்ரில்லியன் டாலர் தொழில் முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வருவேன் என்று கூறியது  கனவாக போய்விடுமா என்பதுதான் அனைவரின் கேள்வியாக  உள்ளது

என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment